Monday, September 27, 2021
Home International News சமஸ்கிருத பாதுகாப்பின் அவசியம்

சமஸ்கிருத பாதுகாப்பின் அவசியம்

சமஸ்கிருத பாதுகாப்பின் அவசியம்:சமஸ்கிருத மொழியில் காணப்படும் இலக்கண அமைப்பு, இலக்கிய வளமை, கலை நுணுக்கம் ஆகியவற்றிற்கு ஈடுஇணை இல்லை. இது தேவ-பாஷா, ஸ்வர்கத்திலுள்ள தேவர்களால் பேசப்படும் புனிதமான மொழி என்று அறியப்படுகிறது. வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பஞ்சராத்ரங்கள் என எல்லா வேத இலக்கியங்களும் சமஸ்கிருத மொழியில்தான் ஆதியில் இயற்றப்பட்டன. தத்துவ விஷயங்களை ஆழமாக அலசி ஆராய்வதற்கும் நுட்பமான வேற்றுமைகளை அறிவதற்கும் பக்குவமான மொழி அவசியமாகிறது. சமஸ்கிருதம் இத்தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே, இந்துக்களின் புனிதமான மொழி என்றும் சமஸ்கிருதம் அறியப்படுகிறது.எல்லாக் கோயில்களிலும் மந்திரங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் உச்சரிக்கப்படுகின்றன. பகவத் கீதை உலக மக்கள் அனைவருக்கும் ஆன்மீக அறிவின் மணிமகுடமாகத் திகழ்கிறது, குறைந்தபட்சம் இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பகவத் கீதை சமஸ்கிருத மொழியில்தானே உள்ளது. திருக்குறளை எந்த மொழியில் எவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்தாலும், தமிழ் அறிந்தோரால் மட்டுமே அதன் சுவையை முழுமையாகச் சுவைக்க முடியும். அதுபோல, பகவத் கீதை என்னும் அறிவுப் பெட்டகத்தை முழுமையாகச் சுவைப்பதற்கு சமஸ்கிருத கல்வி உதவியாக இருக்கும்.முன்னரே கூறியதுபோல, இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் என ஸநாதன தர்மத்தை எடுத்துரைக்கும் எல்லா நூல்களும் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டுள்ளன. இன்றும் பல்வேறு இஸ்லாமியர்கள் குரான் படிப்பதற்காகவே அரேபிய மொழியினைக் கற்கின்றனர். அம்மொழியினை எங்காவது ஏளனம் செய்கிறார்களா, வெறுப்பை வெளிப்படுத்துகிறார்களா? இல்லை, கூடாது. ஆயினும், இந்துக்கள் என்று கூறிக்கொள்வோர் சமஸ்கிருதம் அறியாவிட்டால்கூட பரவாயில்லை, அதனை ஏன் எதிர்க்க வேண்டும்? இதனைப் பாதுகாத்து வளர்த்தல் நம் கடமையன்றோ?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments